அறிவிப்புகள்:

அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் சிங்கப்பூர் தேசிய தின நல்வாழ்த்துக்கள்!

தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு

8-ஆம் ஆகஸ்ட் 2007, புதன்கிழமை அன்று துணைப்பாட வகுப்பு நடைபெறாது.

Saturday, 23 June 2007

வணக்கம் மாணவர்களே! வருக வருக...


புதிய தவணையைத் தொடங்க இருக்கிறோம்
புத்தம் புது குறிக்கோள்களை எழுத இருக்கிறோம்
கல்வி பயணத்தைத் தொடர இருக்கிறோம்
இறுதியில் வெற்றியை நிலைநாட்ட இருக்கிறோம்

உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
வெற்றி பயணம் தொடரட்டும்...

1 comment:

Kasthuri Narayanan said...

(மகிழ்ச்சியான சம்பவம்)

தேர்வில்

மாணவர்களின் பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்த மணி ''ரிங் ரிங்'' என்று ஒலித்தது.எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

மாணவர்கள் குருவின் வருகைகாக காத்திருந்தார்கள். தேர்வு தாளை அன்று ஆசிரியர் கொடு்க்க வேண்டிய நாள் ஆகும். சற்று நேரத்தி்ல் ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார். நான் தேர்வுத் தாளைப் பெற ஆர்வமாக இருந்தேன். ஆசிரியர் மருகணமே, ''கவிதாதான் நம் வகுப்பில் சிறந்த மாணவியாக திகழ்கிறாள்'', என்று கம்பீரக் குரலில் அறிவி்த்தார். நான் அந்தச் செய்தியைச் செவிமடைந்தவுடன் அளவி்ல்லா மகி்ழ்ச்சி அடைந்தேன். குரு என்னைக் கூப்பிட்டு கௌரவித்தார். நான் முகமலர்ச்சியுடன் என் தேர்வுத் தாளைப் பெற்றேன். நானும் ராமுவும் நகமும் சதையும் போல் இணை பிரியாத சக தோழர்கள்.

ராமு என் உழைப்பை மெச்சினான். ஆசிரியர் என்னைப் புகழ்ந்தார். பள்ளி முடிந்தது என்று அறிவிக்க பள்ளி மணி ஓசை எழுப்பியது. நான் தக்க தருணத்தில் என் வகுப்பறையை விட்டு, சிட்டுக்குருவி கூண்டிலை விட்டு வெளியேறுவதைப் போல் ஆனந்தத்துடன் வெளியேறினேன். என் இல்லத்தை நோக்கி சிட்டாய் பறந்தேன். வீட்டை அடைந்தவுடன் நான் ''அம்மா!அம்மா!'' என்று கணீர் குரலில் கத்தினேன். அம்மாவு்ம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். நான் நடந்ததை எல்லாம் அவரிடம் எடுத்துரைத்தேன். அவர் அதைக் கேட்டவுடன் உச்சி குளிர்ந்தார்.

(129 சொற்கள்)